Friday, 10 April 2020

யூரிக் ஆசிட் Uric Acid

யூரிக் ஆசிட் Uric Acid

புரோட்டீன் அதிகமாக எடுத்துக்கொள்வதால் யூரிக் ஆசிட் அதிகரிக்கிறது. இது அதிகமானால் பாதத்தில் வலி, எலும்பு ஜாயிண்ட்களில் வலி என வரும். முற்றினால் கீழ் வாத நோய் வரை வரலாம் என எழுதியிருக்காங்க.

இரண்டே வாரத்தில் இதை நார்மல் ஆக்கிவிடலாம் உடலில்.

வைட்டமின் சி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் இரண்டே வாரத்தில் யூரிக் அமிலம் நார்மல் ஆகிவிடும். நீர்ச்சத்து காய்களிகளான புடலை, சுரை, பூசணி, பீர்க்கங்காய், வெள்ளரி, சவ் சவ் ஆகியவற்றை தொடர்ந்து எடுக்கும் போது இரண்டே வாரத்திற்குள் நார்மல் ஆகிவிடும்.

எலுமிச்சை/நெல்லி சாறு தினம் குடிப்பதும் பலன் அளிக்கும்.

புளிப்பு அதிகமாகி பல் கூச்சம் வருவதை தடுக்க இஞ்சி சாறு எடுத்துக்கொள்ளவும்

Thursday, 9 April 2020

வெள்ளைபடுதல் White discharge

வெள்ளை படுதல் உடல் உஷ்ணத்தால் வரும் பிரச்சினை. வெண்பூசணி, புடலங்காய், பீரக்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து காய்கறிகளை ஜூஸாக குடித்தாலோ அல்லது பச்சையாகவோ அல்லது கூட்டு/பொறியல் செய்து சாப்பிட்டால் இரண்டு நாட்களுக்குள் சரி ஆகிவிடும். வீணாக பயப்படப்பட வேண்டாம்.

தொப்புளில் தேங்காய் எண்ணெய் விட்டு சுற்றி தடவினால் உடல் உஷ்ணம் குறையும். அடி வயிறு வலி குறையும். நன்கு உறக்கம் வரும்

வெண்பூசணி வெள்ளைபடுதல்
https://youtu.be/GY2SoLvyzaU

Friday, 3 April 2020

சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, கண்ணில் நீர்வடிதல்

டஸ்ட் அலர்ஜி
மழையில் நனைவதால் வரும் ஜலதோஷம், மூக்கடைப்பு,
மூக்கில் நீர் வடிதல்,
கண்ணில் நீர் வடிதல்,
தலைவலி,
தொண்டை கரகரப்பு,
காய்ச்சல்,
உணவால் வரும் வாந்தி பேதி,
மாதவிடாய் காலங்களில் வரும் அதிக உதிரப்போக்கு,
வயிற்றுவலி
பனிக்காலத்தில் அதிக பனியால் வரும் அனைத்து சளி, தலைவலி தொல்லைகள் நீங்க
சளித்தொல்லையால் கண்ணீல் நீர் வடிதல்
என எல்லாத்துக்கும் பசுமஞ்சள் 30கிராம்(தோல் நீக்கியது) பசுமஞ்சளை 50 (அ) 100மிலி தண்ணீர் கலந்து அரைத்து குடித்தால் உடனடி நிவாரணம். காலை வெறும் வயிற்றில் குடித்தால் மிக நன்று.

30gm turmeric  (skin removed) with 50ml or 100ml water grind and drink. Immediate relief.

For cold
#sinus
coughs
#diaria
gastric
Dust allergies
Throats infections
Nose congestion
Chests congestion
Headache
Body pain

குழந்தைகளுக்கு 10 - 15கிராம் அளவில் கொடுக்கலாம்.

ஒரு வேளை குடித்து முன்னேற்றம் இல்லை என்றால் மருத்துவரை பார்க்கவும்.

ஒரே வேளை எடுத்துக்கொண்டதில் எனக்கு குணமாகியது மற்றும் பலருக்கும் (ஆதாரங்கள் இணைத்துள்ளேன்).

மேலும் விபரங்களை நெல்லை சாரதி என்ற பக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

தினம் பூண்டு சாப்பிட்டால்

இத்தனையும் நமது பரிசோதனையில் பூண்டு சாப்பிட்டு கிடைத்த முடிவுகள்

WBC அதிகரிக்கும்
சுகர் குறையும்
ட்ரைகிளிசைரைடு குறையும்
முடி கொட்டாது
முட்டி வலி குறையும்
முதுகு வலி குறையும்
சுளுக்கு விடுபடும்
வாமத்தொல்லை விடுபடும்
பிரசர் குறையும்
விந்து கட்டிபடும்.
ஆண்மை பெருகும்
வாயுத்தொல்லை விலகும்.
இரத்தபோக்கு சீராக இருக்கும்.
மூலம் சரி ஆகும்
எடை, இடை குறையும்
குடற்புழு (warm) குணமாகும்.


பூபதே GTC


சுகர், பிரசர், கொலஸ்ட்ரோல் அதிகமாக உள்ள பிரச்சினை,
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள்
  4 பற்கள் பூண்டு சிறியதாக வெட்டி பத்து நிமிடம் வைத்து காலை வெறும் வயிற்றில் விழுங்கி விடவும். தேவைக்கு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து பூண்டு சாப்பிடும் போது லோ சுகர்/ லோ பிரசர் ஆகலாம். பூண்டு சாப்பிட்டால் மாத்திரை வேண்டாம். மாத்திரை இல்லாமலும் லோ சுகர் /லோ பிரசர் ஆகும் போது பூண்டு எண்ணிக்கையை குறைக்கவும். தொடர்ந்து உங்களது சுகர் பிரசர் எண்களை கணக்கிட்டு கொள்ளுங்கள். அவரவரின் சொந்த  முயற்சியும் சிந்தனையும் அவசியம்.

லோ சுகர் ஆனால் ஸ்வீட் எடுத்துக்கொள்ளவும்.

லோ பிரசர் ஆனால் உப்பு போட்டு லெமன் ஜீஸ் அல்லது மோர் குடிக்கவும்.

லோ சுகர் அச்சம் இருப்பவர்கள்

சுகர் 300க்கு மேல் இருந்தால் 4 பற்கள்
சுகர் 200க்கு மேல் இருந்தால் 3 பற்கள்
சுகர் 200க்கு கீழே இருந்தால் 2 பற்கள்
என முயற்சி செய்து பாருங்கள்.

பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும். அவரவர் உடலுக்கு ஏற்ப 1பல் எடுப்பதா அல்லது 2பல் எடுப்பதா அல்லது 3பல் எடுப்பதா அல்லது 4பல் எடுப்பதா முடிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது நார்மல் அளவுள்ள நாட்டுப்பூண்டு பற்களை தான். நீங்கள் எடுக்கும் பற்களின் அளவை பொருத்து ஒவ்வோருவரின் உடலுக்கும் மாற்றம் வரும். மலைப்பூண்டு அளவில் பெரியது என்பதால் 1 அல்லது 2 பற்கள் போதும்

மூன்று வேளை உணவுக்கு முன்/பின் பூண்டு சாப்பிட்டால் மாத்திரை நிறுத்திவிடலாம். மூன்று வேளை பூண்டு சாப்பிட்டால் உடல்  உஷ்ணமடையும். வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

உடல் வலி எப்போது வந்தாலும் ஒரு பூண்டு 4 பல்லை வெட்டி வைத்து விழுங்கினால் உடல் வலி குறையும்.

ஆஸ்தமா, வீசிங், தலைவலி, சளி, இருமல், தைராய்டு, டான்சில், உணவுக்குழாய் பிரச்சினை உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சினை, மூச்சுவிட சிரமப்படுபவர்கள், தலையில் பிரச்சினை உள்ளவர்கள், மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பபை நீரக்கட்டி பிரச்சினை உள்ளவர்கள்
பசுமஞ்சள் ஆட்காட்டி விரல் நீளத்தில் தினம் காலை வெறும் வயிற்றில் மென்னு சாப்பிட்டவும்

தொப்பை குறைக்க விரும்புவோர் ஒவ்வொரு உணவுக்கு 20 நிமிடம் முன் 2 tablespoon செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் குடிக்கவும்.

எடை குறைக்க விரும்புவோர் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும்.

மனிதராய் பிறந்த அனைவருமே இதை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

உங்களது உடல் பிரச்சினைக்கேற்ப எதை முதலில் எடுத்துக்கலாம் என சொந்த மூளையை பயன்படுத்திக்கவும்.

இரவில் பூண்டு சாப்பிடுவது இன்ப நேரத்தை அதிகரிக்கும்.

HsCRP க்கு ஒரு விரல் நீளமும் எடுக்கலாம் அல்லது ஒரு இஞ்ச் + 5 கருமிளகு + ஒரு சின்ன வெங்காயமும் எடுக்கலாம்.

பூ பூண்டு G Garlic
பசுமஞ்சள் T Turmeric
தே தேங்காயெண்ணெய் C coconut oil
எனக்கு லிங்க் எடுக்க வசதியா பூபதே GTC

சுளுக்கு, தசைப்பிடிப்பு


தூக்கத்தில் ஏற்படும் கழுத்து சுளுக்கு, வாயத்தொல்லைகளால் உடலில் ஏற்படும் சுளுக்கு, முதுகில் ஏற்படும் மூச்சுபிடிப்பு, பானை போன்ற காற்றடைத்த வயிறு குறைய பூண்டு 4பல் வெட்டி வைத்து 5 நிமிடம் கழித்து விழுங்கவும்.

பூண்டு சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

மாதவிடாய் பிரச்சினைகள்

ஒழுங்கற்ற மாதவிடாய், அதீத உதிரப்போக்கு, உதிரப்போக்கு இல்லாமை, (6-8 வரை) நெடுநாள் நீடித்தல், கட்டி கட்டியாக ரத்தம் வருதல்,  அதீத வயிற்றுவலி, மார்பக வலி, கர்ப்பபையில் நீரக்கட்டிகள், PCOD, PCoS போன்ற அனைத்து பிரச்சினைகளும் சரியாக தினம் காலை வெறும் வயிற்றில் ஆட்காட்டி விரல் நீள அளவில் பசுமஞ்சள் தோல் நீக்கி மென்னு சாப்பிடவும்.

உடன் பூண்டு 4 பல்  சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடம் கழித்து விழுங்கவும்.

பசுமஞ்சள், பூண்டு சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

Thursday, 2 April 2020

ஆண்மை குறைபாடு (Erection dysfunction)

ஆண்மை குறைபாடு (Erection dysfunction) உள்ளவர்கள் தினம் காலையில் 4பல் பூண்டு சிறிது சிறிதாக வெட்டி 5நிமிடம் வைத்து விழுங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவிலும் 4பல் பூண்டு விழுங்கும் போது இன்ப நேரத்தை அதிகரிக்கிறது.

விந்து கட்டிபடலை, விந்து வேகமாக நீந்தி செல்லலை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி ஆகிவிடும்.

பூண்டு சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

ஆஸ்தமா Asthma வீசிங் wheezing

உங்களுக்கு ஆஸ்தமா, வீசிங் இருந்தால் தினம் உங்கள் ஆட்காட்டி விரல் நீள அளவில் பசுமஞ்சள் சாப்பிட்டு வாருங்கள். மூன்று மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும். ஆயுசுக்கும் மாத்திரை சாப்பிடும் அவஸ்தை இருக்காது. அதன் பக்க விளைவுகள் இருக்காது. 

பசுமஞ்சள் சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

தைராய்டு Thyroid

உங்களுக்கு தைராய்டு இருந்தால் தினம் உங்கள் ஆட்காட்டி விரல் நீள அளவில் பசுமஞ்சள் சாப்பிட்டு வாருங்கள். மூன்று மாதத்திற்குள் உங்கள் TSH கட்டுக்குள் வந்துவிடும். ஆயுசுக்கும் தைராய்டு மாத்திரை சாப்பிடும் அவஸ்தை இருக்காது. அதன் பக்க விளைவுகள் இருக்காது.

பசுமஞ்சள் சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

Pressure இரத்த அழுத்தம்

உங்களுக்கு இரத்த அழுத்தம்/பிரசர் இருந்தால் 4 பற்கள் பூண்டு எடுத்து சிறிது சிறிதாக வெட்டி 5நிமிடம் வைத்து மாத்திரை போல் விழுங்கி விடுங்கள். உணவுக்கு முன்னும் விழுங்கலாம். உணவுக்கு பின்னும் விழுங்கலாம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் மென்னும் சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடும் போது உங்களது இரத்த அழுத்தம்/பிரசர் அளவு கட்டுக்குள் வரும். மாத்திரையை நிறுத்திவிடலாம்.

மாத்திரையும் எடுத்து பூண்டும் எடுத்தால் லோ பிரசர் ஆகும் கவனத்தில் கொள்ளவும்.

பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும். அவரவர் உடலுக்கு ஏற்ப 1பல் எடுப்பதா அல்லது 2பல் எடுப்பதா அல்லது 3பல் எடுப்பதா அல்லது 4பல் எடுப்பதா முடிவு செய்து கொள்ளுங்கள்.


இங்கு நான் குறிப்பிடுவது நார்மல் அளவுள்ள நாட்டுப்பூண்டு பற்களை தான். நீங்கள் எடுக்கும் பற்களின் அளவை பொருத்து ஒவ்வோருவரின் உடலுக்கும் மாற்றம் வரும். மலைப்பூண்டு அளவில் பெரியது என்பதால் 1 அல்லது 2 பற்கள் போதும்

Diabetic சுகர்

உங்களுக்கு சுகர் இருந்தால் 4 பற்கள் பூண்டு எடுத்து சிறிது சிறிதாக வெட்டி 5நிமிடம் வைத்து மாத்திரை போல் விழுங்கி விடுங்கள். உணவுக்கு முன்னும் விழுங்கலாம். உணவுக்கு பின்னும் விழுங்கலாம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் மென்னும் சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடும் போது உங்களது சுகர் அளவு கட்டுக்குள் வரும். மாத்திரையை நிறுத்திவிடலாம்.

மாத்திரையும் எடுத்து பூண்டும் எடுத்தால் லோ சுகர் ஆகும் கவனத்தில் கொள்ளவும்.

லோ சுகர் அச்சம் இருப்பவர்கள்

சுகர் 300க்கு மேல் இருந்தால் 4 பற்கள்
சுகர் 200க்கு மேல் இருந்தால் 3 பற்கள்
சுகர் 200க்கு கீழே இருந்தால் 2 பற்கள்
என முயற்சி செய்து பாருங்கள்.

பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும். அவரவர் உடலுக்கு ஏற்ப 1பல் எடுப்பதா அல்லது 2பல் எடுப்பதா அல்லது 3பல் எடுப்பதா அல்லது 4பல் எடுப்பதா முடிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது நார்மல் அளவுள்ள நாட்டுப்பூண்டு பற்களை தான். நீங்கள் எடுக்கும் பற்களின் அளவை பொருத்து ஒவ்வோருவரின் உடலுக்கும் மாற்றம் வரும். மலைப்பூண்டு அளவில் பெரியது என்பதால் 1 அல்லது 2 பற்கள் போதும்

பூண்டு Raw Garlic

வேகவைக்காத பச்சை பூண்டு  Raw Garlic

பூண்டு பற்றியும், பூண்டில் இருக்கும் அலிசிலின் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் ஆயிரம் ஆய்வுகள் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கும். டாக்டர் டக்லஸ் வாலஸ், டாக்டர் ஹெக்டே முதல் பலர் பச்சையா பூண்டு சாப்பிடுவதின் பலன் பற்றி அருமையாக கூறியுள்ளனர்.

வேக வைக்காத பச்சை பூண்டு எப்படி பயன்படுத்தாலாம். அது எந்த நோயை எல்லாம் குணப்படுத்தும் இந்த பக்கத்தில் காணலாம். நான் பயன்படுத்திய அளவையும் அதனால் கிடைத்த பயன்களையும் மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்

பூணடை சிறிது சிறிதாக வெட்டும் போது அதிலிருந்து அலிசிலின் அமிலம் வெளிப்படும். ஐந்து நிமிடம் கழித்து விழுங்கும் போது தொண்டையில் காயம் ( inflammation) எதுவும் ஆகாது. முழு பூண்டாக விழுங்க முடியாது. பெரிய பெரிய துண்டாக தண்ணீர் அதிகம் குடித்து விழுங்க வேண்டாம். பெரிதாக விழுங்கினால் ஜீரணமாகாமல் முழுவதுமா மலத்தில் வந்தது போல் தெரியும்.

எனக்கு முழு பூண்டை வாயில் போட்டு காக்கா கடி கடித்து பல் இடையில் ஒதுக்கிக்கொள்வேன். அப்படி செய்யும் போது அதிக உமிழ்நீர் சுரக்கும். நன்கு ஜீரணம் ஆகும். நன்கு பசி எடுக்கும். அலிசினும் உமிழ்நீரும் சேரும் போது நல்ல பலன் கிடைக்கும் என டாக்டர் ஹெக்டே பதிவில் பின் தெரிந்து கொண்டேன்.

உங்களுக்கு எப்படி விருப்பமோ எப்படி முடியுமோ அப்படி சாப்பிடலாம்/விழுங்கலாம்.

பூண்டு சாப்பிட்டால் உடல் அதிக உஷ்ணம் ஆகும். தேவைக்கு தண்ணீர் குடித்துக்கொள்ளவும் அல்லது  வெண்பூசணி, சுரைக்காய், பீரக்கங்காய், வெள்ளரி போன்ற நீரச்சத்து காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

பூண்டு சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

பசுமஞ்சள்

Turmeric  - மஞ்சள்
Raw Turmeric - பசுமஞ்சள்
வேக வைக்காத மண்ணிலிருந்து எடுத்த பச்சை மஞ்சளை பசுமஞ்சள் என்கிறோம்.

மஞ்சளைப் பற்றியும், மஞ்சளில் கிடைக்கும் குர்குமின் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் ஆயிரம் ஆய்வுகள் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கும்.

வேக வைக்காத பச்சை மஞ்சளை எப்படி பயன்படுத்தாலாம். அது எந்த நோயை எல்லாம் குணப்படுத்தும் இந்த பக்கத்தில் காணலாம். நான் பயன்படுத்திய அளவையும் அதனால் கிடைத்த பயன்களையும் மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்.

ஆட்காட்டி விரல் (Index finger size)  பசுமஞ்சளை தோல் நீக்கிவிட்டு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும்/கிடைத்த நன்மைகள் ஏராளம். பசுமஞ்சள் மென்னு சாப்பிடுவதால் வாய் மஞ்சளாகும். பல் தேய்த்தால் போய் விடும்.

அதிக குர்குமின் உள்ள பசுமஞ்சள் என்பது ஆரஞ்ச் கலர்லயும், எண்ணெய் பசை தன்மையுடன் பிசுபிசுப்பாகவும் இருக்கும். அதுவே அதில் சில சமயம் அமோனியா வாசம் வருவதற்கான காரணம்.

நல்ல சத்தான மண்ணில், இயற்கை உரத்தில் விளைந்த பசுபஞ்சளில் தான் 10% குர்குமின் இருக்கும். மற்ற பசுமஞ்சளில் 2% முதல் 4% வரையே குர்குமின் இருக்கும்.

பசுமஞ்சளை வேக வைத்து பொடியாக பயன்படுத்தும் போது  அதில் குர்குமின் அளவு மிக (2% வரை) குறைவாகவே இருக்கும். அதனாலயே பச்சை மஞ்சளை சாப்பிடச்சொல்வது

பசுமஞ்சள் சாப்பிட இனிப்பு இல்லாத காரட் போலத்தான் இருக்கும். அவரவர் விரலுக்கு ஒரு விரல் அளவு எல்லோருமே தினம் சாப்பிடலாம்.

நீங்கள் இப்போது சாப்பிடும் உணவு முறையில் எந்த மாற்றமும் இல்லாமல் இதைச்சாப்பிடலாம். பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் சாப்பிடுவதாக இருந்தால் நான்கு மணி நேரம் இடைவெளி வேண்டும்.

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதாக இருந்தால் இரண்டு மணி நேரம் இடைவெளி வேண்டும்.

பசுமஞ்சள் சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்