Thursday, 2 April 2020

பசுமஞ்சள்

Turmeric  - மஞ்சள்
Raw Turmeric - பசுமஞ்சள்
வேக வைக்காத மண்ணிலிருந்து எடுத்த பச்சை மஞ்சளை பசுமஞ்சள் என்கிறோம்.

மஞ்சளைப் பற்றியும், மஞ்சளில் கிடைக்கும் குர்குமின் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் ஆயிரம் ஆய்வுகள் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கும்.

வேக வைக்காத பச்சை மஞ்சளை எப்படி பயன்படுத்தாலாம். அது எந்த நோயை எல்லாம் குணப்படுத்தும் இந்த பக்கத்தில் காணலாம். நான் பயன்படுத்திய அளவையும் அதனால் கிடைத்த பயன்களையும் மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்.

ஆட்காட்டி விரல் (Index finger size)  பசுமஞ்சளை தோல் நீக்கிவிட்டு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும்/கிடைத்த நன்மைகள் ஏராளம். பசுமஞ்சள் மென்னு சாப்பிடுவதால் வாய் மஞ்சளாகும். பல் தேய்த்தால் போய் விடும்.

அதிக குர்குமின் உள்ள பசுமஞ்சள் என்பது ஆரஞ்ச் கலர்லயும், எண்ணெய் பசை தன்மையுடன் பிசுபிசுப்பாகவும் இருக்கும். அதுவே அதில் சில சமயம் அமோனியா வாசம் வருவதற்கான காரணம்.

நல்ல சத்தான மண்ணில், இயற்கை உரத்தில் விளைந்த பசுபஞ்சளில் தான் 10% குர்குமின் இருக்கும். மற்ற பசுமஞ்சளில் 2% முதல் 4% வரையே குர்குமின் இருக்கும்.

பசுமஞ்சளை வேக வைத்து பொடியாக பயன்படுத்தும் போது  அதில் குர்குமின் அளவு மிக (2% வரை) குறைவாகவே இருக்கும். அதனாலயே பச்சை மஞ்சளை சாப்பிடச்சொல்வது

பசுமஞ்சள் சாப்பிட இனிப்பு இல்லாத காரட் போலத்தான் இருக்கும். அவரவர் விரலுக்கு ஒரு விரல் அளவு எல்லோருமே தினம் சாப்பிடலாம்.

நீங்கள் இப்போது சாப்பிடும் உணவு முறையில் எந்த மாற்றமும் இல்லாமல் இதைச்சாப்பிடலாம். பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் சாப்பிடுவதாக இருந்தால் நான்கு மணி நேரம் இடைவெளி வேண்டும்.

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதாக இருந்தால் இரண்டு மணி நேரம் இடைவெளி வேண்டும்.

பசுமஞ்சள் சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

8 comments:

  1. ஐயா,வணக்கம். பசுமஞ்சள் எங்கு கிடைக்கும்,எப்படி வாங்குவது?நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இவங்க பசுமஞ்சள் விற்கிறாங்க. இவங்க கிட்ட வேகவைக்காத பசுமஞ்சள் கிழங்கு மலிவாக, தரமாக யார்கிட்ட கிடைக்குதோ அவங்க கிட்ட வாங்கிக்கோங்க

      பேஸ்ட் வாங்கச்சொன்னாங்க பொடி வாங்கச்சொன்னாங்க என அவங்க மார்க்கெட்டிங் பண்றத நீங்க வாங்குறதும் வாங்காததும் உங்க சுய அறிவை பொருத்தது.

      நான், பசுமஞ்சள் மட்டும் தான் தினம் அவரவர் ஆட்காட்டி விரல் நீளம் தோல் நீக்கி சாப்பிடச்சொல்றேன்

      #bigbasket
      https://www.bigbasket.com/pd/40020581/fresho-fresh-turmeric-organically-grown-250-g/

      செல்வ முரளி
      https://www.facebook.com/selva.murali

      #அமிர்தம் இயற்கை அங்காடி
      https://www.facebook.com/AmirthamErode

      #ஆரண்ய அல்லி
      https://www.facebook.com/aaranya.alli

      #ஹெர்பி பேலியோ
      https://www.facebook.com/herbee.paleo.3

      #திருமூர்த்தி (ஏப்ரலில் மட்டுமே கிடைக்கும்)
      https://www.facebook.com/thiru.murthy.568

      இளமாறன்
      https://www.facebook.com/billamaran.billa

      அகரம் மூரத்தி பெருந்துறை
      https://www.facebook.com/profile.php?id=100008461981525

      மோகன்ராஜ் 9944441951

      Delete
    2. பசு மஞ்சள் தோலுடன் சாப்பிடலாமா?

      Delete
  2. ��எங்கள் கல்லூர் இயற்கை பண்ணையில் (TNOF-113) முழுவதும் இயற்கை முறையில் விளைந்த மஞ்சள் கிழங்கு விற்பனைக்கு(சுமார் 2டன்கள்) உள்ளது.

    �� தொடர்ந்து மூன்றாவது ஆண்டு அறுவடை இது.

    ��சென்ற ஆண்டு எங்கள் மஞ்சளை மதிப்பு கூட்டி மஞ்சள் தூளாக்கி அதை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அதில் உள்ள குர்குமின் அளவு 6க்கு மேல் இருந்தது.இது சிறந்த ஏற்றுமதி தரம் என கேள்விப்பட்டோம்.இந்த ஆண்டு அதன் அளவு இன்னும் கூடியிருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

    ��ஆக விதைக்காகவும் பிற தேவைகளுக்கும் வேண்டும் நட்பு உறவுகள்,விவசாய தோழர்கள் தொடர்பு கொள்ளலாம்.



    ��அதோடு தேவைப்படும் அன்பு உள்ளங்களுக்கு வேக வைக்காமல் பச்சையாகவே அதன் தரம் சிறிதும் குறையாமல் நறுக்கி நிழலில் உலர்த்தி மஞ்சள் தூளாக்கியும் தருகிறோம்.

    ��இடம்: காரைக்குடி(கல்லூர்)

    ��எண்: 8610133616

    ��விலை:
    1.விதை மஞ்சள்:ரூ.50/கிலோ (பார்சல் செலவு தனி)
    2.பசுமஞ்சள் தூள்:ரூ.280/கிலோ

    மஞ்சள் புக் செய்ய https://forms.gle/6KBPTBwXcKBWsVh99
    கிளிக் செய்யுங்கள்

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள்.நன்றி

    ReplyDelete
  4. பசு மஞ்சள்ஒருஅற்புதமான மருந்து.

    ReplyDelete
  5. அய்யா சிறந்த தன்னலமற்ற பொதுச்சேவை செய்யும் தங்களைப்பாராட்டுகிறேன்.
    அவசரக்காரர்கள் தங்கள் நலமே பெரிதென தங்களை தொந்தரவு செய்வதைப்பொறுத்துக்கொண்டு பணியாற்றுங்கள்
    இறைவன் தங்களையும் தங்கள் வம்சாவழியையும் நலமுடனும் வளமுடனும் வைத்திருப்பார்.நன்றி

    ReplyDelete
  6. தொடர்ந்து சாப்பிடும் போது வயிற்றில் கிருமி வருமா

    ReplyDelete